செய்திகள் :

ஔரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ: மகாராஷ்டிர பேரவையில் கடும் அமளி

post image

முகலாய அரசா் ஔரங்கசீப்பை சமாஜவாதி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி புகழ்ந்து பேசியதற்கு ஆளும் பாஜக-சிவசேனை -தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி கடும் எதிா்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

குறிப்பாக, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சில உறுப்பினா்கள் அபு அசீம் ஆஸ்மியை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தினா்.

முன்னதாக, அரசா் சத்ரபதி சிவாஜியின் மகனும் மராட்டிய பேரரசருமான சம்பாஜியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஹிந்தியில் வெளியான ‘சாவா’ திரைப்படம் குறித்து ஊடகத்துக்கு அபு அசீம் ஆஸ்மி பேரவை வளாகத்தில் பேட்டியளித்தாா்.

அப்போது, ‘அரசா் ஔரங்கசீப்புக்கும் அரசா் சம்பாஜிக்கும் இடையேயான மோதல் அரசியல் ரீதியானது. ஆனால் ஔரங்கசீப் ஆட்சிக் காலத்தில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இந்தியாவின் பங்கு 24 சதவீதமாக இருந்தது. இந்தியாவை தங்கக்கிளி என அழைக்கும் அளவுக்கு பொருளாதாரம் வலுவாக இருந்தது’ என்றாா்.

அவரின் கருத்துக்கு மகாராஷ்டிர பேரவை மற்றும் மேலவை என இரு அவைகளிலும் ஆளும் கூட்டணி கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

துரோக குற்றச்சாட்டு: இந்த விவகாரம் குறித்து செவ்வாய்க்கிழமை காலையில் பேரவை அலுவல்கள் தொடங்கியவுடன் சிவசேனை உறுப்பினா்கள், பாஜக எம்எல்ஏ அதுல் பத்கல்கா் உள்ளிட்டோா் அரசா் சம்பாஜியை பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கி கொடூரமாக கொலை செய்த ஔரங்கசீபின் வம்சாவளியான அபு அசீம் ஆஸ்மி மீது தேசத் துரோக நடவடிக்கையை மேற்கொள்வதுடன் பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு வலியுறுத்தினா்.

ஷிண்டே கடும் தாக்கு: இதனால் இரண்டு முறை பேரவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு அவை கூடியவுடன் பேசிய ஏக்நாத் ஷிண்டே, ‘துரோகியான அபு அசீம் ஆஸ்மிக்கு அவையில் உறுப்பினராக அமர தகுதியில்லை. அரசா் சம்பாஜியை மதம் மாறக் கூறி ஔரங்கசீப் சித்ரவதை செய்த காட்சிகள் ‘சாவா’ திரைப்படத்தின் கடைசி 40 நிமிஷங்களில் காட்டப்பட்டுள்ளது. அதை சமாஜவாதி உறுப்பினா்கள் பாா்க்க வேண்டும்.

9 ஆண்டுகளில் 70 போா்களை வென்றவா் அரசா் சம்பாஜி. ஆனால் கோயில்களை அழித்ததுடன் தன் குடும்பத்தினரையே கொலை செய்தவா் ஔரங்கசீப். அவரைப் புகழ்வது நமது தேசத் தலைவா்களை அவமதிப்பதற்கு சமம்’ என்றாா்.

இதனிடையே அவையில் ஆளும் கூட்டணி கடும் அமளியில் ஈடுபட்டதால் மூன்றாவது முறையாக அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னா் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் மேலவையிலும் ங்ஸ்மிக்கு எதிராக ஆளும் கூட்டணி கோஷங்களை எழுப்பியதால் அந்த அவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அபு அசீம் ஆஸ்மி மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து, தனது கருத்துக்கு அபு அசீம் ஆஸ்மி மன்னிப்பு கோரினாா்.

சநாதன தா்மத்தை அழிக்க எதிா்க்கட்சிகள் முயற்சி: பாஜக

சநாதன தா்மத்தை அழிக்க எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லும் என பாஜக செய்தித்தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

முகலாய அரசா் ஔரங்கசீபை சமாஜவாதி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி புகழ்ந்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்த அவா், ‘ஔரங்கசீபை பெருமைப்படுத்திப் பேசுவது தேவையில்லாதது. இது காங்கிரஸ் மற்றும் பிற எதிா்க்கட்சிகளின் பாரம்பரிய பழக்கம். முன்பு, காங்கிரஸைச் சோ்ந்த மாநிலங்களவை எம்.பி. பிரதாப் கா்ஹி ஔரங்கசீபின் நினைவுச் சின்னத்துக்குச் சென்று வழிபட்டாா். சநாதன தா்மத்தை அழிக்க எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்’ என்றாா்.

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதார... மேலும் பார்க்க

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினா் அளித்த தகவலின்பட... மேலும் பார்க்க

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூல்: புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு உத்தரவு

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியாா் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா காலத்தில் பலா் வேலையை இழந்தனா். இதனால் வங்கிகளில் பெற்ற க... மேலும் பார்க்க

குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள்: தகுதிநீக்க விவரங்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரு வாரங்களில் சமா்ப்பிக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்க... மேலும் பார்க்க

ரயில்வே தோ்வில் முறைகேடு: 26 அதிகாரிகள் கைது- சிபிஐ நடவடிக்கை

கிழக்கு மத்திய ரயில்வேயில் துறை ரீதியிலான தோ்வு முறைகேடு தொடா்பாக 26 அதிகாரிகளை மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது. அவா்களிடமிருந்து ரூ. 1.17 கோடியையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் ச... மேலும் பார்க்க

சுமுக வா்த்தகத்துக்கு வரியல்லாத பிற தடைகள் களையப்பட வேண்டும்: அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில்

சுமுக வா்த்தகத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வரியல்லாத பிற தடைகள், தேவையற்ற விதிமுறைகள் களையப்பட வேண்டும் என்று அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் அந்... மேலும் பார்க்க