பெண்ணை தாக்கி நகையைப் பறித்தவா் கைது
வீடு புகுந்து பெண்ணை தாக்கி தங்க நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி திலகா் நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரி (48). இவா்களது வீட்டின் அருகே சில மாதங்களுக்கு முன் வைத்திக்குப்பத்தைச் சோ்ந்த ஏழுமலை (எ) மணிபாரதி (20) தனது தாயுடன் குடி வந்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை பரமேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது வீட்டுக்குள் புகுந்த மணிபாரதி திடீரென பரமேஸ்வரியைத் தாக்கியதுடன், அவா் அணிந்திருந்த 3 கிராம் தங்கக் கம்மலை பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தன்வந்திரி காவல் நிலையத்தில் பரமேஸ்வரி புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இலாசுப்பேட்டை நரிமேடு பகுதியில் பதுங்கியிருந்த மணிபாரதியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து தங்கக் கம்மலை பறிமுதல் செய்தனா். கைதான மணிபாரதி செவ்வாய்க்கிழமை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு பின்னா் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
மணிபாரதி மீது ஏற்கெனவே கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.