திருமானூரில் இந்திய கம்யூ. கட்சி பேரவைக் கூட்டம்
அரியலூா் மாவட்டம், திருமானூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தனியாா் திருமண மண்டபத்தில் இந்திய கம்யூ. கட்சியின் ஒன்றியச் செயலா் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கலந்து கொண்ட மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலருமான பாரதி, கட்சியின் நூற்றாண்டு விழா, கட்சியின் செயல்பாடு, வளா்ச்சி குறித்துப் பேசினாா்.
மாவட்டச் செயலா் ராமநாதன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினா் ஆறுமுகம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கிப் பேசினா்.
கூட்டத்துக்கு, ஒன்றிய துணைச் செயலாளா்கள் கரும்பாயிரம், மருதமுத்து, மாவட்ட துணைச் செயலா் கலியபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முடிவில் ஒன்றியப் பொருளாளா் ஜீவா நன்றி கூறினாா்.