செய்திகள் :

14.8 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற கன்னட நடிகை கைது!

post image

பெங்களூரு விமான நிலையத்தில் 14.8 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.

கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்புக்கு ஜோடியாக மாணிக்யா படத்தில் அறிமுகமான ரன்யா ராவ், தமிழில் விக்ரம் பிரபுடன் வாஹா படத்திலும் நடித்துள்ளார்.

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை இரவு ரன்யா ராவ் உரிய ஆவணங்கள் இல்லாத 14.8 கிலோ தங்கம் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அவரைக் கைது செய்து பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும், 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 15 நாள்களில் ரன்யா ராவ் நான்கு முறை துபைக்குப் பயணம் செய்துள்ளார். இதனால், அவர் தனியாக தங்கம் கடத்தினாரா? அல்லது அவருக்குப் பின்னால் யாரும் உள்ளனரவா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு: கர்நாடக அரசு முடிவு!

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகத்தில் பொதுக் கொள்முதல் சட்ட வெளிப்படைத் தன்மையின் கீழ் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கொண்டு வரப்படவுள்ளத... மேலும் பார்க்க

30 முறை துபை சென்ற நடிகை! தங்கம் கடத்தவா? வெளியான தகவல்

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ. 12.56 கோடி மதிப்புடைய 14. 8 கிலோ தங்கம் கடத்திச் சென்றதாக கன்னட நடிகை ரன்யா ராவ் நேற்று முன்தினம் (மார்ச் 3) கைது செய்யப்பட்டார். சினிமா நடிகை என்ற புகழைப் பயன்படுத்தி ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர்களை குடியேற்றும் குஜராத் ஏஜென்டுகள்!

சட்டவிரோதமாக இந்தியர்களை நாடுகடத்தும் ஏஜென்டுகளில் பெரும்பாலானோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்று அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.சட்டவிரோதமாக இந்தியர்களை நாடுகடத்தும் ஏஜென்டுகள் குறித்து ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பிடியில் 144 இந்திய மீனவர்கள், 1173 படகுகள்!

குஜராத்தைச் சேர்ந்த 144 மீனவர்களையும் 1173 படகுகளையும் பாகிஸ்தான் சிறைபிடித்து வைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மீனவர்கள் கைதுபாகிஸ்தானில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளின் நிலைமை... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் 66% பொருளாதார வளர்ச்சி: பிரதமர் பெருமிதம்

மற்ற நாடுகளைவிட இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.மத்திய பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, வேலைவாய்ப்புகளை உருவ... மேலும் பார்க்க

பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களுக்குத் தடை

அதிக சாலை விபத்துகள் காரணமாக பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு நெடுஞ்சாலை ஆணையம் தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.நெடுஞ்சாலை விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 4 பே... மேலும் பார்க்க