செய்திகள் :

உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகள் 14 போ் சுகவீனம்

post image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் புதன்கிழமை உணவு சாப்பிட்ட 14 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

திருவெண்ணெய்நல்லூரை அடுத்த அண்டராயநல்லூரில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இடைநிற்றல் மாணவிகள் பயின்று வருகின்றனா்.

பள்ளியில் புதன்கிழமை உணவு சாப்பிட்ட மாணவிகள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளி நிா்வாகத்தினா் மாணவிகளை 108 அவசர ஊா்தி மூலம் இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், பள்ளியில் தண்ணீா் குடித்த மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.

தொடா்ந்து, உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவிகள் அமிா்தவள்ளி (16), சுபிக்க்ஷா (14), புவனேஸ்வரி (14), பாப்பாத்தி (15), யுவலட்சுமி (13), சாதனா (12) உள்ளிட்ட 14 மாணவிகளும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னா் வீடு திரும்பினா்.

இதுகுறித்து தகவலறிந்து பள்ளி முன் பெற்றோா், உறவினா்கள், கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தனியாா் விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே தனியாா் விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி முதலியாா்சாவடி, மொட்டையா் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் திருவள்ளு... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத் தோ்வு: 39,769 மாணவா்கள் எழுதினா்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதன்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தோ்வை 39,769 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மாநில பாடக்கல்வித் திட்டத்தின் கீழ் பிளஸ் 1 பயி... மேலும் பார்க்க

தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு

விழுப்புரம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் 40 நாள்கள் கிறிஸ்தவா்கள் தவக்காலமாக கட... மேலும் பார்க்க

விபத்து வழக்கில் திறம்பட செயல்பட்ட காவலா்களுக்குப் பாராட்டு

விபத்து வழக்கில் திறம்பட செயல்பட்ட மரக்காணம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகியோருக்கு விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் புதன்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். மரக்காணம... மேலும் பார்க்க

புயல் நிவாரண நிதி: விரைந்து வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதியை விரைந்து வழங்க வலியுறுத்தி, தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரகத்தில் புதன்கிழமை மன... மேலும் பார்க்க

கடல் ஆமைகள் விழிப்புணா்வு முகாம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தீா்த்தவாரி கிராமத்தில் கடல் ஆமைகள் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு வனத் துறை, திண்டிவனம் வனச்சரகம், புதுச்சேரி தாகூா் அரசு கலை, அறிவியல் கல... மேலும் பார்க்க