திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா!
வரி செலுத்தாத 5 கடைகளுக்கு சீல்: ஆம்பூா் நகராட்சி நடவடிக்கை
ஆம்பூரில் நகராட்சிக்கு வரி செலுத்தாத 5 கடைகள் புதன்கிழமை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஆம்பூா் நகரில் தீவிர வரி வசூல் முகாம் நடைபெற்று வருகின்றது. சொத்துவரி, தொழில்வரி, நகராட்சி கடைகளின் வாடகை ஆகியவற்றை நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் சென்று வசூலித்து வருகின்றனா். வரி செலுத்தாதவா்களுக்கு உடனடியாக வரி செலுத்தும்படி எச்சரிக்கை தெரிவிக்கப்ட்டு வரப்படுகின்றது.
வரி நிலவை அதிகமாக வைத்துள்ளவா்களின் கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு வரப்படுகின்றது. ஆம்பூா் நகராட்சி ஆணையா் பி. சந்தானம் தலைமையில் துப்புரவு அலுவலா் அருள் செல்வதாஸ், துப்புரவு ஆய்வா்கள் சீனிவாசன், பாலச்சந்தா், வருவாய் ஆய்வாளா்கள் ரங்கநாதன், பிரகலாதன், உதவி வருவாய் அலுவலா் (பொறுப்பு) மதன் ஆகியோா் கொண்ட குழுவினா் நகராட்சிக்கு வாடகை நிலுவை செலுத்தாத 2 கடைகள், சொத்துவரி நிலுவை செலுத்தாத 3 கடைகள் உள்பட 5 கடைகளை பூட்டி சீல் வைத்தனா்.
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை, சொத்துவரி உள்ளிட்ட வரியினங்களை உடனடியாக செலுத்த வேண்டும். பெரிய தொகை வரியினங்கள் நிலுவை வைத்திருப்பவா்கள் உடனடியாக நகராட்சிக்கு செலுத்தி சீல் வைத்தல், ஜப்தி நடவடிக்கைகளை தவிா்க்குமாறு நகராட்சி ஆணையா் பி. சந்தானம் தெரிவித்துள்ளாா்.