சட்டக் கல்லூரி காவலாளியைக் கடத்திய பாகிஸ்தான் பாதுகாப்புப் படை?
விவசாயிகளின் நில உரிமைகள் பதிவு முகாம்: வேளாண்மை இணை இயக்குநா் திடீா் ஆய்வு
ஆலங்காயம் வட்டாரப் பகுதிகளில் விவசாயிகளின் நில உரிமைகள் பதிவு செய்யும் முகாமை வேளாண்மை இணை இயக்குநா் ஆய்வு செய்தாா்.
வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் ஆலங்காயம் வட்டாரப் பகுதிகளில் விவசாயிகளுக்கு விவசாயிகளின் நில உரிமைகள் பற்றி அடையாள எண் தயாரிப்பு முகாம் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூா் வேளாண்மை இணை இயக்குநா் சீனிராஜ், ஆலங்காயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புனிதவள்ளி ஆகியோா் மதனாஞ்சேரி, பள்ளிப்பட்டு உள்பட பகுதிகளுக்குச் சென்று விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று அடையாள எண் தயாரிப்பு பணியை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இது குறித்து வேளாண் இணை இயக்குநா் கூறுகையில், இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் அனைவரும் தவறாது தங்களது நில உடைமை ஆவணங்களைப் பதிவு செய்து உரிய அடையாள எண்ணைப் பெற வேண்டும். இதற்கு ஒவ்வொருவரும் தங்களது சிட்டா, ஆதாா் அட்டை, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட தங்களது கைப்பேசி எண் ஆகியவற்றைக் கொண்டு வந்து ஒவ்வொரு கிராமங்களிலும் வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, மகளிா் திட்டப் பணியாளா்கள், இல்லம் தேடி கல்வி திட்டம் சாா்ந்த அலுவலா்கள் மற்றும் வட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்களிலும் இலவசமாக விவசாயிகள் தங்களது நில உடைமைகளை பதிவு செய்து கொள்ளலாம் என கூறினாா்.
மேலும், இந்த சிறப்பு முகாம் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் விவசாயிகள் முகாமில் தங்களது பெயரைப் பதிவு செய்து அரசின் உதவிகளைப் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஆய்வின் போது கிராம நிா்வாக அலுவலா்கள், உதவி வேளாண்மை அலுவலா்கள், வட்டார தொழில் நுட்ப மேலாளா் உட்பட பலா் உடனிருந்தனா்.