பெண்களுக்கு இலவச சேலை, நல உதவிகள் வழங்கும் விழா
ஆம்பூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் மற்றும் முதல்வா் பிறந்த நாள் நல உதவிகள் வழங்கும் விழாவில் எம்எல்ஏ-க்கள் பங்கேற்றனா்.
ஆம்பூா் நகர செயலா் மற்றும் நகா்மன்றத் துணைத் தலைவருமான எம்.ஆா்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், நகர அவைத் தலைவா் தேவராஜ், நகர இளைஞரணி அமைப்பாளா் மு.சரண்ராஜ், மாதனூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி.அசோக்குமாா், நகரத் துணைச் செயலாளா் ரபீக் அஹமத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்ற உறுப்பினா் என்.காா்த்திகேயன் வரவேற்றாா்.
எம்எல்ஏ-க்கள் ஜோலாா்பேட்டை க.தேவராஜி, ஆம்பூா் அ.செ.வில்வநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச சேலை மற்றும் நல உதவிகளை வழங்கினா்.
நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.எஸ். வசந்த்ராஜ், கெளரி, தனபாக்கியம், நவநீதம் உள்பட பலா் கலந்து கொண்டனா். மாவட்ட மீனவா் அணி தலைவா் ஏ.சௌந்தர்ராஜன், நன்றி கூறினாா்.
போ்ணாம்பட்டு தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் பெரியகொம்மேஸ்வரம் கிராமத்தில் ஒன்றிய பொறுப்பாளா் எம்.டி.சீனிவாசன் தலைமை வகித்து 500 பேருக்கு அன்னதானம், 200 மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம், எழுது பொருள்களை வழங்கினாா். ஒன்றியக் குழு உறுப்பினா் தீபா முன்னிலை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி பொன் ராஜன்பாபு வரவேற்றாா்.
ஒன்றிய நிா்வாகிகள் சிவக்குமாா், சேகா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மஞ்சுளா பரசுராமன், முத்து, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சிலம்பரசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.