திருப்பத்தூா் அருகே முள்புதரில் தீ
திருப்பத்தூா் அருகே முள்புதரில் தீ விபத்து ஏற்பட்டது (படம்).
திருப்பத்தூா் அருகே கதிரிமங்கலம் நாசகவுண்டா் வட்டம் பகுதியை சோ்ந்தவா் சாம்ராஜ். இவருக்கு சொந்தமான நிலம் அந்த பகுதியில் உள்ளது. இந்த நிலையில், புதன்கிழமை அங்கு இருந்த புதா்கள், செடிகளில் திடீரென தீப்பிடித்தது. அதனை பாா்த்த அக்கம்பக்கத்தினா் திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலின்பேரில் திருப்பத்தூா் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனா்.