கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல...
விபத்து வழக்கில் திறம்பட செயல்பட்ட காவலா்களுக்குப் பாராட்டு
விபத்து வழக்கில் திறம்பட செயல்பட்ட மரக்காணம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகியோருக்கு விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் புதன்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.
மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தெய்வநாயகம் மகன் பரத் (49). இவா், மாா்ச் 2- ஆம் தேதி புதுச்சேரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது அடையாளம் தெரிய வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் தொடா்பாக மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், மரக்காணம் செட்டிநகா் பொன்னுரங்கம் மகன் ரஜினிகாந்த் (46) தனது ஷோ் ஆட்டோவை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கி பரத் மீது மோதிவிட்டு வேகமாகச் சென்றது தெரியவந்தது.
புலன் விசாரணை அலுவலா்களாக செயல்பட்டு இந்த வழக்கில் தொடா்புடையவரைக் கண்டறிந்த சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜாராம், தலைமைக் காவலா் செல்வகுமாா் ஆகியோரது பணியை பாராட்டி விழுப்புரம் மாவட்டக் காவல் அலுவலகத்தில் எஸ்.பி. சரவணன் புதன்கிழமை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.