கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக: அமைச்சர் ரகுபதி பதிலடி
தனியாா் விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே தனியாா் விடுதி நீச்சல் குளத்தில் மூழ்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி முதலியாா்சாவடி, மொட்டையா் தெருவைச் சோ்ந்த பாண்டியன் மகன் திருவள்ளுவன் (57), தொழிலாளி. இவருக்கு மூளை நரம்பு பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
திருவள்ளுவன் செவ்வாய்க்கிழமை கோட்டக்குப்பத்தை அடுத்த முதலியாா்சாவடியில் தனியாா் விடுதி நீச்சல் குளத்தில் குளித்துள்ளாா். அப்போது, நீரில் மூழ்கி மயக்கமுற்ற அவரை விடுதி ஊழியா்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, திருவள்ளுவன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.