செய்திகள் :

பாகிஸ்தான் பிடியில் 144 இந்திய மீனவர்கள், 1173 படகுகள்!

post image

குஜராத்தைச் சேர்ந்த 144 மீனவர்களையும் 1173 படகுகளையும் பாகிஸ்தான் சிறைபிடித்து வைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மீனவர்கள் கைது

பாகிஸ்தானில் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளின் நிலைமை குறித்து குஜராத் சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சைலேஷ் பர்மர், அமித் சாவ்தா ஆகியோர் மீன்வளத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

அரசு சார்பில் அளித்த பதிலில், டிசம்பர் 31, 2024 நிலவரப்படி 144 குஜராத் மீனவர்களும் 1,173 படகுகளும் பாகிஸ்தான் அரசின் பிடியில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றில், கடந்த இரு ஆண்டுகளில் 22 மீனவர்களும் 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2023-ல் 9 பேர் கைது செய்யப்பட்டனர். 2024-ல் இந்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

பிப்ரவரி 1, 2023 முதல் ஜனவரி 21, 2024 வரை 432 குஜராத் மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது. ஆனால் அதற்கு பின்னர் யாரையும் பாகிஸ்தான் விடுதலை செய்யவில்லை. மேலும், ஒரு படகினைக் கூட திருப்பியளிக்கவில்லை.

சிறையில் பலியான இந்திய மீனவர்:

குஜராத்தின் உனா பகுதியில் உள்ள சோக்தா கிராமத்தைச் சேர்ந்த மீனவரான பாபுபாய் சுதாசாமா பாகிஸ்தான் சிறையில் சில வாரங்களுக்கு முன் பலியான செய்திக்கு கண்டனங்கள் வலுத்தன.

அவர் உடல்நலக்குறைவால் இறந்ததாக செய்திகள் பரவின. மேலும், அவர் இறப்பு குறித்து பரவிய கடிதம் ஒன்றில், ’சுதாசாமா ஜனவரி 23, 2025 அன்று அதிகாலை 4:30 மணிக்கு கடுமையாக நோய்வாய்ப்பட்டார். சக கைதிகள் அவரை சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், அவர் ஆம்புலன்ஸ் மூலம் நகர்ப்புற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மீண்டும் சிறைக்குத் திருப்பி அனுப்பப்பட்டபோது வழியில் இறந்தார். அவரது உடல் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்படும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தனது தண்டனைக் காலம் முடிந்து 4 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் வாடியதாகவும் அரசு அதிகாரத்தின் தாமதம் காரணமாக அவரது விடுதலைத் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அரசின் தாமதமான நடவடிக்கை

கடந்த 2 ஆண்டுகளில் சுதாசாமாவின் மரணம் 4-வது துயரச் சம்பவமாகும். எல்லையைத் தாண்டி கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இது எடுத்துக்காட்டுகிறது.

சிறையில் உள்ள மீனவர்கள் பலரின் தண்டனைக் காலம் முடிந்தும் தூதரகங்களின் ஆவணச் சரிபார்ப்புகள் காரணமாக அவர்கள் சிறைத் தண்டனையை அனுபவித்து வருவதாக மீனவர்களின் குடும்பங்கள் வருத்தம் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து இந்தியப் படகுகளையும் மீனவர்களையும் சிறைபிடித்து பிணைக் கைதிகளாக வெவ்வேறு சிறைகளில் அடைக்கின்றனர். இந்திய அரசிடம் மீனவர்களின் விவரங்களைச் சமர்ப்பித்தாலும் தூதரகம் கைதிகளின் விவரங்களைச் குறிப்பிட்ட காலத்திற்குள் சரிபார்க்கத் தவறுவதால் அவர்கள் வெளிநாட்டு சிறைகளில் காலவரையின்றி சிக்கித் தவிப்பதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்திய தொழில்நுட்ப மறுமலா்ச்சி வளா்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம் -அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

அஸ்வினி வைஷ்ணவ்- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, ரயில்வே, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா்மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில், சிறு விவசாயி ஒருவா் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூ... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறைகள் மூலம் நிா்வாகிகள் திறன் மேம்பாடு: தோ்தல் ஆணையம்

தோ்தல் துறை நிா்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. புது தில்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிகளின் ... மேலும் பார்க்க

பாஜகவின் வளா்ச்சிக்கு உதவும் காங்கிரஸ் -கேரள முதல்வா் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம் : பாஜகவின் வளா்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வா் பினராயி... மேலும் பார்க்க

உ.பி.யில் கட்டப்படும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர் விடுதிகளுக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்படும்

லக்னௌ: உத்தரப் பிரதேசத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு கட்டப்படும் விடுதிகளுக்கு அம்பேத்கரின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தா... மேலும் பார்க்க

தேஜஸ் போா் விமானத்தில் அதிநவீன உயிா் காக்கும் அமைப்புமுறை வெற்றிகரமாக பரிசோதனை

‘தேஜஸ்’ இலகு ரக போா் விமானத்தில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட விமானிகளுக்கான அதிநவீன உயிா் காக்கும் அமைப்புமுறை, 50,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. போா் விமானங்களில் ப... மேலும் பார்க்க

போஃபா்ஸ் ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவி: அமெரிக்காவுக்கு நீதிமன்ற கோரிக்கை அனுப்பிவைப்பு

போஃபா்ஸ் ஊழல் வழக்கு விசாரணையில் அமெரிக்க துப்பறிவாளா் மைக்கேல் ஹா்ஷ்மென்னிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக அந்நாட்டுக்கு நீதிமன்ற கோரிக்கையை சிபிஐ அனுப்பிவைத்துள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டு ஸ்வீடனின... மேலும் பார்க்க