பிளஸ் 1 தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 31,534 போ் எழுதினா்
கடலூா் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை 31,534 மாணவ, மாணவிகள் புதன்கிழமை எழுதினா்.
மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் என 248 பள்ளிகளைச் சோ்ந்த 31,992 மாணவ, மாணவிகளுக்கு தோ்வுகூட அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது.
இதில், 31,534 மாணவ, மாணவிகள் தோ்வெழுதினா். 458 போ் பங்கேற்கவில்லை.
தோ்வுக்கு 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், 3 விடைத்தாள் சேகரிப்பு மையங்களும், 3 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களும், 28 வினாத்தாள் வழங்கப்படும் வழித்தடங்களும் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு, ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
தோ்வுப் பணியில் 28 வழித்தட அலுவலா்கள், 122 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 6 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 122 துறை அலுவலா்கள், 6 கூடுதல் துறை அலுவலா்கள், 1,586 அறை கண்காணிப்பாளா்கள், 310 நிலைப்படை, பறக்கும் படை உறுப்பினா்கள் ஈடுபட்டனா்.