செய்திகள் :

``அம்மா தற்கொலை முயற்சி செய்யவில்லை...'' - காரணம் சொல்லும் பாடகி கல்பனாவின் மகள்!

post image

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் அவரது ஹைதராபாத் இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், அவரது தற்கொலை முயற்சி குறித்து பல்வேறு தகவல்கள் பரவிக்கொண்டிருக்க, அவரின் மகள் அத்தனையையும் மறுத்துள்ளார்.

அவர் மகள் கூறியதாவது, "என்னுடைய அம்மாவிற்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர் நன்றாகவும், சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார். அவர் ஒரு பாடகி. அவர் பி.எச்.டியும், எல்.எல்.டியும் படித்து வருகிறார். இதனால் அவருக்கு தூக்கமின்மை ஏற்பட்டுள்ளது.

Kalpana Raghavendar: அம்மா தற்கொலை முயற்சி செய்யவில்லை...
அம்மா தற்கொலை முயற்சி செய்யவில்லை...

இதை சரிசெய்ய, டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்து வருகிறார். இந்த மருந்துகள் ஓவர்டோஸ் ஆகியுள்ளது. அவ்வளவு தான். வதந்திகளை பரப்பாதீர்கள்.

இப்போது என்னுடைய அம்மா நன்றாக இருக்கிறார். அம்மாவும், அப்பாவும் சந்தோஷமாக இருக்கின்றனர். எங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமாக இருக்கின்றனர். அம்மா சீக்கிரம் வீடு திரும்பிவிடுவார். இது தற்கொலை முயற்சி அல்ல" என்று பேசியிருக்கிறார்.

போலீசார் தகவலின் படி, கல்பனா தூக்கமாத்திரைகளை எடுத்துள்ளார். அதற்கான சிகிச்சையை தான் மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். இப்போது அவர் நலமாக இருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Tamannaah: தமன்னா - விஜய் வர்மா 2 ஆண்டுகள் காதல் தோல்வியில் முடிந்ததா..?

தமிழ் படங்களில் அதிக அளவில் நடித்து வந்த நடிகை தமன்னா பாட்டியா சமீப காலமாக பாலிவுட் மற்றும் வெப்சீரியஸ்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனால் தமிழ் சினிமா பக்கம் அவரை அதிகமாக காணமுடிவதில்லை. கடந்... மேலும் பார்க்க

நெல்லை: கோயில் திருவிழா.. இருதரப்பு பிரச்னையால் அன்னதான பாத்திரங்களை அப்புறப்படுத்திய காவல்துறை!

நெல்லை பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டில் சொக்கலிங்க சுவாமி கோயில் மற்றும் அய்யா வைகுண்டர் பதி அமைந்துள்ளது.இந்தக் கோயிலில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பிடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது த... மேலும் பார்க்க

Mark Zuckerberg: மனைவியின் பிறந்த நாள்; மாஸான சர்ப்ரைஸ் கொடுத்த மார்க் - வைரலாகும் வீடியோ

மெட்டா நிறுவன தலைவர் மார்க் சக்கர்பெர்க் தன் மனைவியின் பிறந்தநாளில் சர்பரைஸ் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரிசில்லா என்பவரைத் தி... மேலும் பார்க்க

Trump : 'ஜெலன்ஸ்கி ஏன் கோட் சூட் அணியவில்லை?' - பத்திரிகையாளரின் கேள்வியும் மக்களின் ரியாக்சனும்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சந்திப்புதான் நேற்று( பிப்ரவரி 1) முழுவதும் டாக் ஆஃப் தி வொர்ல்டு ஆக இருந்தது. இந்நிலையில், அந்த சந்திப்புக்கு ஜெலன்ஸ்கி கோட் சூட் அணியா... மேலும் பார்க்க

ஹோட்டலில் கொல்கத்தா பிரியாணியை பார்சல் செய்த இங்கிலாந்து மன்னர்... அரசக் குடும்பத்தினர் கூறுவதென்ன?

லண்டனின் கார்னபி தெருவில் இயங்கி வருகிறது டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ் ஹோட்டல். இந்தியாவின் பிரபலமான பாலிவுட் நடிகை அஸ்மா தான் இந்த ஹோட்டலின் உரிமையாளர்.இவர் கொல்கத்தாவில் உள்ள லா மார்டினியர், லோரெட்டோ கல்லூ... மேலும் பார்க்க

Trump Gaza: கண்டனத்துக்குள்ளான டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட 'AI' வீடியோ - என்னதான் இருக்கிறது அதில்?

அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடி அமெரிக்காவில் இருக்கும்போதே இந்திய ஆவணமற்ற குடியேறிகளை விலங்கிட்டு அனுப்பி... மேலும் பார்க்க