Trump : 'ஜெலன்ஸ்கி ஏன் கோட் சூட் அணியவில்லை?' - பத்திரிகையாளரின் கேள்வியும் மக்களின் ரியாக்சனும்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சந்திப்புதான் நேற்று( பிப்ரவரி 1) முழுவதும் டாக் ஆஃப் தி வொர்ல்டு ஆக இருந்தது. இந்நிலையில், அந்த சந்திப்புக்கு ஜெலன்ஸ்கி கோட் சூட் அணியாமல் வந்தது பேசுபொருளாகியிருக்கிறது. கனிமவள ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் சந்தித்திருந்தார். அந்த சந்திப்பிற்கு ஜெலன்ஸ்கி கோட் சூட் அணிந்து வரமால் சாதாரண உடையை அணிந்து வந்திருந்தார்.

அப்போது, செய்தியாளர் ஒருவர் நீங்கள் ஏன் கோட் சூட் அணிந்து வரவில்லை . இந்த நாட்டின் உயரிய மதிப்புமிக்க அலுவலகத்துக்கு வந்துள்ளீர்கள் என்று தெரியதா? உங்களிடம் கோட் சூட் இல்லையா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, “ போர் நிறுத்தப்பட்டால், வேறு உடை அணிவேன். அந்த ஆடை, சிறப்பானதாகவும், ஏன் உங்களை போன்று கோட் சூட்டாகவும் கூட இருக்கலாம் " என்று தெரிவித்திருந்தார். மேலும் டொனால்டு ட்ரம்ப்பும் ஜெலன்ஸ்கியின் ஆடை குறித்து வஞ்சப்புகழ்ச்சியுடன் பேசியிருந்தார்.
இந்தச் செய்திகள் இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் எலான் மஸ்க் மீது எழாத கேள்வி ஜெலன்ஸ்கி மீது மட்டும் எழுவது ஏன்? என்று கேட்டு வருகின்றனர். ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று கோடிக்கணக்கான ரூபாயை வாரி வழங்கினார் எலான் மஸ்க். தேர்தல் பிரசார மேடைகளில் ட்ரம்புடன் பங்கேற்றார். இதற்கு கைமாறாக டொனால்ட் ட்ரம்ப், எலான் மஸ்கிற்கு அமெரிக்க DOGE-ன் (Department of Government Efficiency) தலைவர் என்ற முக்கிய பொறுப்பை வழங்கினார்.

சமீபத்தில் இந்த DOGE-ன் மீட்டிங்கில் பங்கேற்ற எலான் மஸ்க் டீசர்ட்டையும், தொப்பியையும் அணிந்திருந்தார். அதை முன்வைத்துதான் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அதாவது, "அமெரிக்க அரசுத்துறை தொடர்பான மீட்டிங்கிற்கு மஸ்க் சாதாரண உடையைத்தான் அணிந்து வந்திருந்தார். அவரை கேள்வி கேட்காதவர்கள் ஜெலன்ஸ்கியை மட்டும் ஏன் கேள்வி கேட்கிறார்கள்" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs