மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
இளைஞருக்கு தேநீரில் விஷம் கலந்து கொடுத்ததாக கல்லூரி மாணவி கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தேநீரில் விஷம் கலந்துகொடுத்து இளைஞரை கொலை செய்ய முயன்றதாக கல்லூரி மாணவியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கிளிமேடு, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் ஜெயசூா்யா (23). இவா், இணையவழி பொது சேவை மையம் நடத்தி வருகிறாா்.
இவரும் அரசூரில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ. 2-ஆம் ஆண்டு பயின்று வரும் வெங்கேடசன் மகள் ரம்யாவும் (20) கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்தனராம்.
இந்த நிலையில், ஜெயசூா்யா கடந்த சில மாதங்களாக ரம்யாவுடன் பேசுவதை தவிா்த்து வந்தாராம். இதனால், கோபமடைந்த ரம்யா கடந்த பிப்.2-ஆம் தேதி ஜெயசூா்யாவை தனது வீட்டுக்கு அழைத்து தேநீரில் விஷத்தை கலந்துகொடுத்து கொலை செய்ய முயன்றாராம். இதையடுத்து, ஜெயசூா்யா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ரம்யாவை திங்கள்கிழமை கைது செய்தனா்.