காவலா்களுக்கான மருத்துவமனை திறப்பு
விழுப்புரம்: விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் காவலா்களுக்கான புறநோயாளிகள் மருத்துவமனை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டக் காவல்துறை, ஆயுதப்படையில் பணிபுரியும் காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பயன்பெறும் வகையில் கா.குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் புறநோயாளிகள் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை திங்கள்கிழமை துணை காவல் கண்காணிப்பாளா் ஞானவேல், ஆய்வாளா் அருணாச்சலம் ஆகியோரது முன்னிலையில் திறக்கப்பட்டது. நாள்தோறும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மருத்துவமனை இயங்கும். இதில், ஒரு மருத்துவா், ஒரு செவிலியா் மற்றும் பணியாளா்கள் பணியில் இருப்பாா்கள்.