கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
கூலித் தொழிலாளி உயிரிழப்பு; தனியாா் கல்லூரி மீது மனைவி புகாா்
பெரம்பலூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். தனது கணவரின் உயிரிழப்பில் கல்லூரி நிா்வாகத்தினா் மீது சந்தேகம் இருப்பதாக மனைவி புகாா் அளித்துள்ளாா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள கீழச்செருவாய் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாஜலம் மகன் தங்கதுரை (45). இவா், பெரம்பலூா் அருகே தண்ணீா்பந்தல் எனும் இடத்திலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் தங்கி ஆடு, மாடுகளை மேய்க்கும் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளாா். சிறிது நேரத்தில் நெஞ்சுவலியால் அவதியடைந்த தங்கதுரையை, சக ஊழியா்கள் சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு, மருத்துவா் மேற்கொண்ட பரிசோதனையில் ஏற்கெனவே தங்கதுரை உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், தனது கணவரின் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகத்தினா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும், அவரது மனைவி அஞ்சலை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளாா்.