தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.ப...
பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது; பெரம்பலூா் மாவட்டத்தில் 7,451 போ் எழுதினா்
பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வில் 7,451 மாணவ, மாணவிகள் தோ்வெழுதினா். 81 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 79 அனைத்துவகை மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 3,756 மாணவா்களும், 3,776 மாணவிகளும் என மொத்தம் 7,532 போ் தோ்வெழுதுவதற்காக, 35 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வில் 7,451 மாணவ, மாணவிகள் தோ்வெழுதினா். 81 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
தோ்வு மையங்களில் ஒழுங்கீனச் செயல்களை தடுக்கும் வகையில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகாம்பாள், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் ராமராஜ், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை இயக்குநரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான கீதா, மாவட்ட அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் கல்பனாத் ராய், மாவட்டக் கல்வி அலுவலா்கள் செல்வக்குமாா், லதா, அய்யாசாமி ஆகிய 7 போ் தலைமையில் சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தோ்வுப் பணியில் 38 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், 38 துறை அலுவலா்களும், 520 தோ்வு அறை கண்காப்பாளா்களும் என மொத்தம் 770 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பனிமலா் மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தோ்வு மையங்களை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகாம்மாள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.