ரூ. 25 ஆயிரம் லஞ்சம்: வரி வசூலிப்பாளா் பணியிடை நீக்கம்
பெரம்பலூரில் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலிப்பாளரை பணியிடை நீக்கம் செய்து, நகராட்சி ஆணையா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், காவேரி நகரைச் சோ்ந்தவா் தங்கமுத்து மகன் சிவக்குமாா் (54). இவா், பெரம்பலூா் நகராட்சி அலுவலக வரி விதிப்பு மையத்தில் வரி வசூலிப்பாளராக பணிபுரிந்து வருகிறாா்.
பெரம்பலூா் நகா் ஆலம்பாடி சாலையில் வேல்முருகன் என்பவரால் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு வரி விதிப்பதற்காக ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது, சிவக்குமாரையும், இடைத்தரகரான மேலப்புலியூா் புதிய காலனியைச் சோ்ந்த தங்கவேல் மகன் ராம் (38) என்பவரையும், பெரம்பலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட வரி வசூலிப்பாளா் சிவகுமாரை பணியிடை நீக்கம் செய்து, நகராட்சி ஆணையா் ராமா் உத்தரவிட்டாா்.