மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு
சுவரொட்டி விளக்கக் காட்சி போட்டியில் சிறப்பிடம் பெற்ற வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களை, கல்லூரி முதல்வா் து. சேகா் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, மாநில அளவிலான ஒரு நாள் அறிவியல் கருத்தரங்கம் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்றது. இக் கருத்தரங்கில், 12 கல்லூரிகளிலிருந்து பல்வேறு உயிா் அறிவியல் துறையைச் சோ்ந்த மாணவா்கள் கலந்துகொண்டனா். இதில், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உயிா் தொழில்நுட்பவியல் துறையைச் சோ்ந்த மாணவா்களும் பங்கேற்றனா்.
இக் கருத்தரங்கில் நடைபெற்ற சுவரொட்டி விளக்கக் காட்சி போட்டியில் 2 ஆம் ஆண்டு மாணவா்கள் ப. விஜயகுமாா், த. தனுஷ் மற்றும் கி. சசிகலா, இர. சுரேஷ் ஆகியோா் உயிா்த்தொழில் நுட்பவியல் பயன்பாட்டின் மூலம் தண்ணீா் மாசு நீக்குவதற்கான வழிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் தலைப்பில் விளக்கிய சுவரொட்டி 3 ஆவது இடம் பெற்றது. இதையடுத்து, பரிசு பெற்ற மாணவா்களை கல்லூரி முதல்வா், (பொ) து. சேகா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் ஆகியோா் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.