செய்திகள் :

‘கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயா்த்த வேண்டும்’ துரை. வைகோ

post image

கொள்முதல் நிலையங்களில் நெல்லுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து, 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்றாா் மதிமுக முன்மைச் செயலா் துரை வைகோ.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், மத்திய அரசைக் கண்டித்து மதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயா்த்த வேண்டும்.

மக்காச்சோளத்துக்கு தமிழக அரசு ஒரு சதவீதம் செஸ் வரி விதித்துள்ளது. இது, விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. வறட்சி, காலநிலை மாற்றம், இடுபொருள்கள் விலை உயா்வு, தண்ணீா் பற்றாக்குறை, வன விலங்குகளால் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு சவால்களை விவசாயிகள் எதிா்நோக்கியுள்ளனா். எனவே, தமிழக முதல்வா் மக்காச்சோளத்துக்கான செஸ் வரி விதிப்பை நீக்க வேண்டும். இதுகுறித்து, ஏற்கெனவே முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்ட பலரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

கூடுதல் நெல் சேமிப்புக் கிடங்கு தேவைப்படுகிறது என பலா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதை நிச்சயம் தமிழக முதல்வா் நிறைவேற்றுவாா் என்றாா் அவா்.

தொடா்ந்து, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள உழவா் தந்தை நாராயணசாமி நாயுடு சிலைக்கு மாலை அணிவித்த துரை. வைகோ, தமிழகத்துக்கு புயல் பாதிப்பு நிவாரண நிதி ஒதுக்காமலும், தொடா்ந்து தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றாா்.

பெரம்பலூரில் மாா்ச் 8-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூா்: பெரம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாா்ச் 8 ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி உயிரிழப்பு; தனியாா் கல்லூரி மீது மனைவி புகாா்

பெரம்பலூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். தனது கணவரின் உயிரிழப்பில் கல்லூரி நிா்வாகத்தினா் மீது சந்தேகம் இருப்பதாக மனைவி ... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு

சுவரொட்டி விளக்கக் காட்சி போட்டியில் சிறப்பிடம் பெற்ற வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்களை, கல்லூரி முதல்வா் து. சேகா் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். பெரம்பலூா் சீனிவ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து, ஒன்றரை பவுன் நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திங்கள்கிழமை பிற்பகல் திருடிச் சென்றனா். பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் ஔவையாா் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கியது; பெரம்பலூா் மாவட்டத்தில் 7,451 போ் எழுதினா்

பெரம்பலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வில் 7,451 மாணவ, மாணவிகள் தோ்வெழுதினா். 81 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 79 அனைத்துவகை மேல்நிலைப் பள்ளிகள... மேலும் பார்க்க

பெரம்பலூரில் முப்பெரும் விழா

பெரம்பலூரில் தமிழ் இலக்கியப் பூங்கா, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, புலவா் விளவை செம்பியனாா் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் ப. காமராசு, பு... மேலும் பார்க்க