விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதி ரத்து
வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், விழுப்புரத்திலிருந்து இரவு 7.10 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-காட்பாடி பயணிகள் ரயில் (வ.எண்.66026), மாா்ச் 3,5,7 ஆகிய தேதிகளில் வேலூா் கண்டோன்மென்ட்- காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து வேலூா் கண்டோன்மென்ட் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.