ஓடிடியில் விடாமுயற்சி!
விடாமுயற்சி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் பிப்.6 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இதில் மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ளமால் சாதாரண கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். கதையாக அவருக்கு நல்ல படமாக அமைந்தாலும் ரசிகர்களிடம் விடாமுயற்சி அதிருப்தியை அளித்துள்ளது.
இதையும் படிக்க: குடும்பஸ்தன் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரபூர்வ அறிவிப்பு!
இப்படம் வணிக ரீதியாக உலகளவில் ரூ. 140 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் இன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.