சென்னை மாநகரப் பேருந்துகளில் 67.80 கோடி மின்னணு பயணச்சீட்டுகள் விநியோகம்
இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? நியூசி. வேகப் பந்துவீச்சாளர் பதில்!
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி பேசியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இந்திய அணியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதையும் படிக்க: வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி
தோல்விக்கு காரணம் என்ன?
துபை ஆடுகளங்களின் தன்மையை அறிந்து இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தியது நியூசிலாந்து அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியதாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி அந்த அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்களை திறம்பட பயன்படுத்தியதாக நினைக்கிறேன். துபை ஆடுகளங்களின் தன்மையை நன்கு அறிந்திருந்தது இந்திய அணிக்கு சாதகமாக இருந்தது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப அவர்கள் மிகவும் அற்புதமாக விளையாடினார்கள். அதுவே எங்களுக்கு சவாலானதாக அமைந்தது.
இதையும் படிக்க: இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கும்; அரையிறுதி குறித்து ரோஹித் சர்மா பேச்சு!
இந்திய அணி நான்கு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் நன்றாக பந்துவீசினார்கள். அவர்கள் ஆடுகளத்தின் தன்மை மற்றும் போட்டியின் சூழலை நன்கு உணர்ந்து செயல்பட்டனர். அதன் காரணமாக, எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்றார்.
நியூசிலாந்துக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.