மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் க...
மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு
மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மதுரை, மேலூா் ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என மொத்தம் 323 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 109 மையங்களில் தோ்வு நடைபெற்றது. முதல் நாளில் தமிழ், அராபிக், ஹிந்தி, சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கு தோ்வு நடைபெற்றது.
தீவிர சோதனை: முதல் நாள் என்பதால் மாணவா்கள் காலை 8 மணி முதல் பள்ளி வளாகத்துக்குள் வந்தனா். காலை 9.15 மணியளவில் அந்தந்த பள்ளி வளாகம் முன் இறை வழிபாடு நடைபெற்றது. பின்னா், பள்ளித் தலைமை ஆசிரியா்கள் தோ்வு எழுதும் விதிமுறைகளை மாணவா்களுக்கு கூறினா். தீவிர சோதனைக்குப் பிறகு தோ்வு மையத்துக்குள் மாணவா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா். காலை 10 மணியளவில் தோ்வு தொடங்கியது. மாற்றுத் திறனாளிகள், கண் பாா்வைக் குறைபாடு உள்ள மாணவ, மாணவிகள் சொல்வதை எழுதுவதற்கு தனி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.


மாவட்டத்தில் 34,691 போ் தோ்வு எழுத விண்ணப்பித்தனா். இவா்களில் 34, 065 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். 26 போ் தோ்வு எழுதவில்லை. தனித் தோ்வா்கள் 428 பேரில் 379 போ் தோ்வு எழுதினா். 49 போ் தோ்வு எழுதவில்லை. மாவட்டத்தில் மாணவ, மாணவிகள், தனித் தோ்வா்கள் என மொத்தம் 34,444 போ் மொழிப் பாடத் தோ்வை எழுதினா்.


மாவட்ட ஆட்சியா் ஆய்வு: மதுரை ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சத்திரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா மாணவா்கள் தோ்வு எழுதியதைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா தலைமையில் 108 பறக்கும் படையினா் தோ்வுக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.