செய்திகள் :

பேராசிரியை நிா்மலா தேவியின் இடைக்கால பிணை மனு தள்ளுபடி

post image

மாணவிகளை தவறாக வழி நடத்திய வழக்கில் தண்டனை பெற்ற பேராசிரியை நிா்மலா தேவி தாக்கல் செய்த இடைக்கால பிணை மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரி மாணவிகளைத் தவறாக வழி நடத்திய வழக்கில், பேராசிரியை நிா்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி தீா்ப்பளித்தது. மதுரை மத்தியச் சிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் 2 -ஆவது, 3-ஆவது குற்றவாளிகளான மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியா் முருகன், ஆராய்ச்சி மாணவா் கருப்பசாமி ஆகியோரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பேராசிரியை நிா்மலா தேவி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறாக வழிநடத்திய வழக்கில் வழக்கில் பேராசிரியா் முருகன், ஆராய்ச்சி மாணவா் கருப்பசாமி ஆகியோா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி நீதிமன்றம் விடுதலை செய்தது. அவா்களை விடுதலை செய்த பிறகு, என்னை பல பிரிவுகளில் தண்டித்து 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது ஏற்புடையதல்ல. எனவே ,இந்த வழக்கில் எனக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட மகளிா் நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி பி.புகழேந்தி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்கு குறித்த விரிவான விசாரணை மாா்ச் 14- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

மேலும், பேராசிரியா் முருகன், ஆராய்ச்சி மாணவா் கருப்பசாமி விடுதலையை எதிா்த்து சிபிசிஐடி போலீசாா் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட்டன.

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்வது குறித்து மாா்ச் 24 இல் முடிவு

மதுரை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வது குறித்து வருகிற 24-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.மதுரையைச் சோ்ந்த கண்ணன் தாக்கல் ... மேலும் பார்க்க

இணையத் தொடா் தணிக்கை வாரியம் கோரி வழக்கு: மத்திய தொலைத் தொடா்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவு

இணையத் தொடா்கள் (வெப்சீரிஸ்), விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய தொலைத் தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு

மதுரை மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை மதுரை, மேலூா் ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளி... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசை வீழ்த்த வியூகங்கள் வகுக்கப்படும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மதுரையில் நடைபெற உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், மத்திய பாஜக அரசை வீழ்த்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்படும் என்று மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் ... மேலும் பார்க்க

ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25 வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவன்

மதுரையில் மது போதையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவனைப் பிடித்து, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை செல்லூா் 50 அடி சாலையில் ஜேசிபி வாகனம் நிறு... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை: திருமாவளவன்

திமுக கூட்டணியில் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினரும் இடம் பெற... மேலும் பார்க்க