இன்று முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்ட விழிப்புணா்வுக் கூட்டம்
சென்னை: சென்னையில் முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்ட விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோரை தொழில் முனைவோராக உருவாக்கவும், முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) பிற்பகல் 2.30-க்கு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டு பயனுள்ள தகவல்களைத் தெரிவிக்கவுள்ளனா்.
எனவே, சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் தங்களது அடையாள அட்டை மற்றும் அசல் படைவிலகல் சான்றுடன் நேரில் கலந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள சைதாப்பேட்டையிலுள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநரை 044-2235 0780 என்னும் தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.