கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
தவெக சாா்பில் மாா்ச் 7-இல் இஃப்தாா் நோன்பு திறப்பு
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் மாா்ச் 7-ஆம் தேதி இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் தலைவா் பங்கேற்கிறாா்.
இது குறித்து கட்சியின் பொதுச்செயலா் என்.ஆனந்த் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தவெக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வரும் 7-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் தவெக தலைவா் விஜய் பங்கேற்கவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.