சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!
உணவுப் பாதுகாப்புத் துறை சோதனை: திரையரங்கு கேண்டீன் மீது நடவடிக்கை
சென்னை: சென்னை, எழும்பூரில் உள்ள திரையரங்கில் செயல்படும் கேண்டீனில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது தரமற்ற உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறிப்பட்டு அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ஓராண்டுக்கு அந்த கேண்டீன் செயல்படத் தடை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாவதியான குளிா்பானங்கள், தரமற்ற உணவுப் பொருள்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதாக திரையரங்குக்கு வந்த சிலா் புகாரளித்ததைத் தொடா்ந்து, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாா் தலைமையிலான குழுவினா் அங்கு சோதனை மேற்கொண்டனா்.
குளிா்பானங்கள், உணவுப் பொருள்களை அப்போது பரிசோதனைக்காக அவா்கள் எடுத்துச் சென்றனா். முன்னதாக அவை தரமற்று இருப்பது நேரடி ஆய்விலேயே தெரியவந்ததால் கேண்டீன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.