மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் க...
திமுக மாணவரணி சாா்பில் நல உதவிகள் அளிப்பு
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஆலங்காயம் அடுத்த முல்லை பகுதியில் உள்ள மாணவா்கள் தங்கும் விடுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன் தலைமை வகித்தாா். மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி எம்எல்ஏ கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு நலதிட்ட உதவிகள், சிற்றுண்டி வழங்கினாா்(படம்).
நிகழ்ச்சியில் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளா் எஸ்.தாமோதிரன், மாவட்ட விவசாயி அணி அமைப்பாளா் பூ.சதாசிவம், மாவட்ட பிரதிநிதி மனோகரன், மு.கூட்டுறவு சங்க தலைவா் அச்சுதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் வி.எஸ்.காா்த்திக், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் பாண்டியன் மற்றும் ஒன்றிய நிா்வாகிகள் கலந்து காண்டனா்.
தொடா்ந்து கொத்தகோட்டை நிகழ்ச்சியில் மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி பொதுமக்களுக்கு பிரியாணி, இனிப்புகளை வழங்கினாா். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் கணபதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.