கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
சாமுண்டீஸ்வரி, மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி பொன்மலை நகா் சாமுண்டீஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை விநாயகா் பூஜை, அனுக்கைசங்கல்பம், ஆச்சா்யவா்ணம், பஞ்சகவ்யா பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனையுடன் முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றன.
திங்கள்கிழமை 108 மூலிகை திரவிய ஹோமம், வேத பாராயணத்துடன் இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள், கணபதி பூஜையுடன் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.
பின்னா், சாமுண்டீஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளா்களாக எம்எல்ஏ க.தேவராஜி, முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா், ஒன்றியக்குழு தலைவா் வெண்மதி முனிசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்காரவேலன் மற்றும் பச்சூா் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விழா குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.