செய்திகள் :

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: ஸ்டீவ் ஸ்மித்

post image

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவது சவாலானது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. துபையில் நாளை நடைபெறவுள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.

இதையும் படிக்க:வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி

ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

இந்தியாவுக்கு எதிராக நாளை அரையிறுதிப் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக உலர்ந்த ஆடுகளங்களில் விளையாடுவது சவாலானது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி மட்டுமின்றி, மற்ற சுழற்பந்துவீச்சாளர்களும் தரமான பந்துவீச்சை வெளிப்படுத்துகின்றனர். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் எப்படி விளையாடப் போகிறோம் என்பது மிகவும் முக்கியம். கண்டிப்பாக, இது மிகுந்த சவாலானதாக இருக்கப் போகிறது. ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கப் போகிறது என நினைக்கிறேன். இதனை நாங்கள் திறம்பட எதிர்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்க: இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கும்; அரையிறுதி குறித்து ரோஹித் சர்மா பேச்சு!

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க எங்களிடம் சில தெரிவுகள் இருக்கின்றன. முக்கியமான போட்டிகளில் விளையாடும்போது கண்டிப்பாக அழுத்தம் என்பது இருக்கும். ஆனால், அழுத்தமான சூழல்களில் டிராவிஸ் ஹெட் எங்களுக்காக கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் சிறப்பாக விளையாடினார். இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் அவர் அதிரடியாக விளையாடப் போகிறார் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். இந்திய அணி அவர்களுக்கான அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடியதால், அவர்களுக்கு ஆடுகளத்தின் தன்மை குறித்து நன்றாக தெரிந்திருக்கும் என்றார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை காலிறுதிப் போட்டிக்குப் பிறகு, ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் இன்று ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா!

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) மோதுகின்றன.குரூப் சுற்றில் இந்தியா தனது 3 ஆட்டங்களிலுமே வெற்றி பெற்று தகுந்த... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவை உருவகேலி செய்து சமூக வலைதளப் பதிவு: பிசிசிஐ எதிர்வினை!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டிருப்பதே இந்திய அளவில் இன்றைய முன்னணி தலைப்புச் செய்திகளில் ஒன்றாக வல... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? நியூசி. வேகப் பந்துவீச்சாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் இந்தியா மற்று... மேலும் பார்க்க

வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதி போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றுடன் குரூப் ஸ்டேஜ் போட்டிகள... மேலும் பார்க்க

இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கும்; அரையிறுதி குறித்து ரோஹித் சர்மா பேச்சு!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இரண்டு அணிகளுக்கும் அழுத்தம் இருக்குமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியு... மேலும் பார்க்க