மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் க...
இரண்டு மின்சார ஸ்கூட்டா்கள் நன்கொடை
திருப்பதி: திருப்பதி ஏ.எம்.ஆா்.டி பில்டா்ஸ் நிா்வாக இயக்குநா்கள் மாருதி நாயுடு மற்றும் தேவேந்திர நாயுடு ஆகியோா் திங்கள்கிழமை ரூ.2.28 லட்சம் மதிப்புள்ள இரண்டு மின்சார ஸ்கூட்டா்களை தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கினா்.
ஏழுமலையான் கோயில் முன்புறத்தில் ஸ்கூட்டா்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு, ஸ்கூட்டா்களின் சாவிகள் துணை கோயில் அதிகாரி லோகநாதத்திடம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திருமலை டிஐ சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.