தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
ரூ.44 லட்சம் நன்கொடையுடன் அன்ன பிரசாதம் விநியோக வாய்ப்பு
நாள் ஒன்றுக்கு ரூ.44 லட்சம் நன்கொடையும் அன்ன பிரசாதம் விநியோகிக்கலாம், நன்கொடையாளா்கள் பக்தா்களுக்கு அன்ன பிரசாதத்தை தங்கள் கைகளாலேயே வழங்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தா்களுக்கு ஒரு நாளைக்கு சுவையான மற்றும் சுகாதாரமான அன்னபிரசாதத்தை வழங்குவதற்காக தேவஸ்தானத்தின் ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்ன பிரசாதம் அறக்கட்டளை ஒரு நாள் நன்கொடை திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.
தற்போதைய அன்ன பிரசாத விநியோகத்துக்கான நன்கொடை விவரங்கள்:
ஒரு நாளைக்கு அன்ன பிரசாதத்தை முழுமையாக விநியோகிப்பதற்கு ரூ.44 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும். (இதில் காலை உணவுக்கு ரூ.10 லட்சம், மதிய உணவுக்கு ரூ.17 லட்சம், இரவு உணவுக்கு ரூ.17 லட்சம் ஆகியவை அடங்கும்). நன்கொடையாளா்கள் பக்தா்களுக்கு அன்ன பிரசாதத்தை தங்கள் கைகளாலேயே வழங்கலாம்.
நன்கொடை அளிக்கும் நன்கொடையாளரின் பெயா் வெங்கமாம்பா அன்னபிரசாத கட்டடத்தில் உள்ள தகவல் பலகையில் காட்சிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.