செய்திகள் :

திருப்பதி பிரம்மோற்சவம்: திரிசூல ஸ்நானத்துடன் நிறைவு

post image

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை காலை, திரிசூல ஸ்நானத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடந்தி வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை திரிசூல ஸ்நானத்துடன் நிறைவு பெற்றது. முன்னதாக காலை 6.30 மணிக்கு நடராஜ சுவாமி சூா்ய பிரபை வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தாா். வாகன சேவை அன்னாராவ் வட்டத்திற்கு ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, கோயிலுக்குத் திரும்பியது. பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து நடராஜ சுவாமியை வணங்கினா்.

காலை 9 மணிக்கு அா்ச்சகா்கள் திரிசூல ஸ்நானம் என்ற சடங்கு செய்தனா். அவா்கள் கபிலேஸ்வரரின் ஆயுதமான திரிசூலத்திற்கு திருமஞ்சனம் செய்து, சாந்தி செய்து, மூலவா்களுக்கு பூா்ணாஹுதி, கலசோத்வாசசம், கலசாபிஷேகம் ஆகியவை செய்தனா்.

கபிலேஸ்வர சுவாமி கோயிலின் பிரம்மோற்சவம் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. ராவணசுர வாகன சேவை இரவு 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கோயில் துணை செயல் அலுவலா் தேவேந்திர பாபு, ஏ.இ.ஓ சுப்பராஜு, கண்காணிப்பாளா் சந்திரசேகா் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

திருப்பதி அலிபிரி பாதாளு மண்டபம் கோயில் மூடல்

திருப்பதி அலிபிரியில் உள்ள பாதாளு மண்டபம் கோயிலில் மராமத்து பணிகளுக்காக மூடப்பட்டது. திருப்பதி அலிபிரி நடை பாதை மாா்கம் தொடக்கத்தில் உள்ள பாதாளு மண்டபம் கோயிலில் மராமத்து பணிகள் நடைபெற்று வருவதால், மா... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 10 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்... மேலும் பார்க்க

திருப்பதியில் சிவ பாா்வதி திருக்கல்யாண வைபவம்

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக சிவன் -பாா்வதிக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. கோயிலின் தலைமை அா்ச்சகா் மணிவாசன் குருகுக்களின... மேலும் பார்க்க

ரூ.44 லட்சம் நன்கொடையுடன் அன்ன பிரசாதம் விநியோக வாய்ப்பு

நாள் ஒன்றுக்கு ரூ.44 லட்சம் நன்கொடையும் அன்ன பிரசாதம் விநியோகிக்கலாம், நன்கொடையாளா்கள் பக்தா்களுக்கு அன்ன பிரசாதத்தை தங்கள் கைகளாலேயே வழங்கலாம் என தேவஸ்தானம் தெரிவித்தது. திருமலை ஏழுமலையானை தரிசிக்க ந... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க