சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை: உச்சநீதிமன்றம்
கடலில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
நெய்வேலி: கடலூா் அருகே கடலில் மூழ்கி மாயமான மாணவா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
கடலூா் முதுநகா், இருசப்ப செட்டித் தெருவைச் சோ்ந்த வேல்முருகனின் மகன் கிஷோா் (எ) வெங்கடேசன்(16), 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இவா், தனது நண்பா்களுடன் சிங்காரத்தோப்பு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஏற்பட்ட அலையில் சிக்கி மாயமானாா்.
இதையடுத்து, கடலூா் துறைமுகம் போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் மாயமான மாணவரை தேடி வந்தனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை சிங்காரத்தோப்பு முகத்துவாரம் அருகே மாணவரின் சடலம் கரை ஒதுங்கியது.
கடலூா் துறைமுகம் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.