கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
30 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா அளிப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 30 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாவுக்கான ஆணையை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.
கடலூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக 871 மனுக்களை அளித்தனா். பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, வருவாய்த் துறை சாா்பில் 30 பழங்குடியின சமுதாய மக்களுக்கு தலா ரூ.50,000 வீதம் என மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணையை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் ராஜீ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கா், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் ராணி, பயிற்சி ஆட்சியா் ஆகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.