கேங்கர்ஸ் வெளியீட்டுத் தேதி!
நடிகர் வடிவேலு - சுந்தர். சியின் கேங்கர்ஸ் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மத கஜ ராஜா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர். சி இயக்கிவரும் திரைப்படம் கேங்கர்ஸ். முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், இப்படம் ஏப். 24 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுந்தர். சி, வடிவேலுவுடன் நடிகை கேத்ரீன் தெரசா, முனிஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.