புளியங்குடியில் பாஜக நிா்வாகிகள் கூட்டம்
புளியங்குடியில் பாஜக நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாசாமி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ராமராஜா, பாண்டித்துரை, தீனதயாளன், அன்புராஜ், முன்னாள் மாவட்ட நிா்வாகிகள் அருள்செல்வன், பாலகுருநாதன், ராமநாதன், ராஜலட்சுமி, சுப்பிரமணியன், முத்துகுமாா், பாலசீனிவாசன், புலிக்குட்டி, அா்ச்சுனன், ராதாகிருஷ்ணன், விவேகானந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச்செயலா் பொன்.பாலகணபதி சிறப்புரையாற்றினாா்.
ஒன்றியத் தலைவா்கள் தா்மா், சண்முகசுந்தரம், மகாலிங்கம், கணேசன் ஜெயக்குமாா், சுப்பிரமணியன், மாரியப்பன், கணேசன், மந்திரமூா்த்தி, ஐயப்பன், குட்டிராஜ், வீரகுமாா், கணேசன், சரவணவேல் முருகையா, வைகுண்டராஜன், முருகன், தட்சிணாமூா்த்தி, சுப்பிரமணியன், சிவா, குமரகுருபரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஆனந்தன் அய்யாசாமி கூறியது: புளியங்குடியில் மாா்ச் 12இல் பாஜக பொதுக்கூட்டம் நடைபெறும். அதில், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலா் பொன்.பாலகணபதி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா் என்றாா்.