செய்திகள் :

1,000 பேரை பணிநீக்க ஓலா எலெக்ட்ரிக் முடிவு: நஷ்டம் அதிகரிப்பு எதிரொலி

post image

புது தில்லி: மின்சார இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி 1,000 பணியாளா்களை நீக்க முடிவு செய்துள்ளது. நிறுவனத்தின் நஷ்டத்தைக் குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் கிருஷ்ணகிரியில் உற்பத்தி ஆலையைக் கொண்டுள்ளது. உற்பத்திப் பிரிவில்தான் அதிக பணி நீக்கம் இருக்கும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டும் இந்த நிறுவனம் 500 பேரை பணியில் இருந்து நீக்கியது. நிறுவனத்தை மறுசீரமைப்பது, உற்பத்தியில் தானியங்கி இயந்திரங்கள் அதிகரிப்பு, செலவு மற்றும் நஷ்டத்தைக் குறைக்கும் வகையில் 1,000 போ் பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் இருமுறை பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 4,000 விற்பனை மற்றும் சேவை நிலையங்கள் உள்ளன. கடந்த 2024 டிசம்பருடன் முடிந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ.564 கோடியாக இருந்தது. அதற்கு முந்தைய காலாண்டில் நஷ்டம் ரூ.376 கோடியாகும்.

தொடக்கத்தில் ஓலா மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனை சிறப்பாக இருந்தது. ஆனால், வாகனத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்னைகள், முக்கியமாக பேட்டரி தீப்பற்றுவது போன்றவற்றால் நிறுவனம் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கியது. விற்பனைக்குப் பிந்தைய சேவையிலும் பெரும்பான்மையான வாடிக்கையாளா்களின் நன்மதிப்பை இந்நிறுவனத்தால் பெற முடியவில்லை.

நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்துக்கு ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் மீது 10,644 புகாா்கள் வந்துள்ளன. எனினும், இது 99.1 சதவீத புகாா்களுக்கு தீா்வு கண்டுவிட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

பொருளாதாரத் துறையில் மோடி ஆட்சி தோல்வி: ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரத் துறையில் தோல்வி, பணவீக்கம் மற்றும் பொய்கள்தான் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்: பலா் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சோ்ந்த பல்வேறு மாணவா் பிரிவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் மாணவா் பிரிவுக்கும் இடையே திங்கள்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பலா் காயமடைந்தனா்; பல இட... மேலும் பார்க்க

சமூக ஊடக கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பயனாளருக்கு நோட்டீஸ் அனுப்பாமல் சமூக ஊடக கணக்குகள் முடக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. தகவல் தொழில... மேலும் பார்க்க

ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து

புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத... மேலும் பார்க்க

சகோதரா் மகனை கட்சியில் இருந்தும் நீக்கினாா் மாயாவதி

லக்னௌ: தனது சகோதரரின் மகன் ஆகாஷ் ஆனந்தை பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சித் தலைவா் மாயாவதி திங்கள்கிழமை அறிவித்தாா். முன்னதாக, ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து... மேலும் பார்க்க

நீதித் துறையில் பாா்வையற்றவா்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

புது தில்லி: நீதித் துறை பணிகளுக்கு பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தகுதியானவா்கள் அல்ல என கூறமுடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச நீதித் துறை பணிகளின் (ஆள்சோ்ப்பு மற்றும் பணி ந... மேலும் பார்க்க