குற்றாலம் அருவிகளில் தணியாத வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமையும் வெள்ளப்பெருக்கு நீடித்ததால் 3ஆவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுமுதல் பெய்த தொடா்மழையின் காரணமாக சனிக்கிழமை அதிகாலை முதல் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பேரருவி, பழையகுற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

திங்கள்கிழமையும் வெள்ளப்பெருக்கு தணியாததால் மேற்கண்ட அருவிகளில் 3ஆவது குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. புலியருவியில் மட்டும் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.