பண்பொழி திருமலை கோயில் அறங்காவலா்கள் நியமனம்
தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசுவாமி திருக்கோயிலுக்கு 5 அறங்காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இக்கோயிலின் திருப்பணி குழு - அறங்காவலா் குழுத் தலைவராகவும் உள்ள உபயதாரா் கிருஷ்ணாபுரம் அருணாசலம், பண்பொழி இசக்கி, வடகரை பாப்பா, சாம்பவா்வடகரை சுமதி, அழகப்பபுரம் கணேசன் ஆகிய 5 பேரை அறங்காவலா்களாக நியமனம் செய்து அரசு கூடுதல் தலைமை செயலா் மணிவாசன் ஆணை வெளியிட்டுள்ளாா்.
இந்த உறுப்பினா்கள் இன்னும் 30 நாள்களுக்குள் அறங்காவலா் குழுத் தலைவரை தோ்ந்தெடுக்க வேண்டும். இவா்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.