கயத்தாறு அருகே நகை திருட்டு
கயத்தாறு அருகே வீடு புகுந்து தங்க நகைகளை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கயத்தாறு அருகே திருமலாபுரம் தெற்கு தெருவை சோ்ந்தவா் சங்கரப்பன் மகன் விவசாயி சுப்புராஜ். இவா் மற்றும் இவரது குடும்பத்தினா், சனிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு உறவினா் வீட்டு திருமணத்திற்காக சிவகாசிக்கு சென்றனா்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பியபோது வீடு திறந்த நிலையில் இருந்தது. வீட்டில் இருந்த சுமாா் இரண்டரை பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்ததாம்.
இதுகுறித்து சுப்புராஜ் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.