தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.ப...
திருமானூரில் ஜல்லிக்கட்டுக்கென விழாக்குழு அமைக்கக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், திருமானூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கென விழாக்குழு அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
இதுகுறித்து அவா்கள் அளித்த மனுவில், திருமானூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, கடந்த 4 ஆண்டுகளாக ஒரு சில நபா்களின் சுயலாபத்துக்காக நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வியாபாரிகளிடம் வசூலிக்கப்படும் தொகைகள், சிலா் தன் சொந்த வீட்டு நிகழ்ச்சி போல் மற்றவா்களை புறக்கணித்து, விழாவை நடத்துகின்றனா். ஆகவே ஜல்லிக்கட்டுக்கென தனி விழாக்குழு அமைக்க வேண்டும்.
இதுகுறித்து பொது இடத்தில் விவாதிக்கப்பட வேண்டும். பாகுபாடி இன்றி அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். மாடு மற்றும் வீரா்களுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் ஆன்லைன் முறையில் வழங்கப்பட வேண்டும். வரவு செலவு கணக்குகளை பொது இடத்தில் முறையான விழாக்குழு முன்னிலையில் சமா்ப்பிக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.