கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
மஞ்சப்பை விருது,பரிசுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது மற்றும் பரிசுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு ஒற்றைப் பயன்பாட்டு நெகிழி கைப் பைகள், பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிா்ப்பித்து, தங்கள் வளாகத்தை நெகிழி இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது மற்றும் ரொக்கப் பணம் பரிசாக வழங்குகிறது.
எனவே, அரியலூா் மாவட்டத்தை சோ்ந்த நெகழி பயன்பாடற்ற பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் விருது மற்றும் பரிசுத் தொகை பெற மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளம் ட்ற்ற்ல்ள்://ஹழ்ண்ஹ்ஹப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய்- ல் தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் இரண்டு பிரதிகளை இணைத்து மாவட்ட ஆட்சியரிடம் மே1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.