கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கான வரி விதிப்பு நடவடிக்கை அமல்!
அரியலூரில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
அரியலூரிலுள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், கிராம காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு செய்யப்பட்டதன் படிவங்கள் பொறுப்பாளா்களிடம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்டத் தலைவா் ஆ. சங்கா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் உரிய பொறுப்பாளா்களிடம் வழங்கப்பட்டன. தொடா்ந்து, பொறுப்பாளா்களின் கையொப்பம் பெற்ற படிவங்களை மாவட்டத் தலைவா் பெற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தியின் ஆணைப்படி அனைத்து கிராமங்களிலும் கமிட்டி அமைப்பது, மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு என்ற பெயரில் மத்திய அரசு குறைத்து விடக்கூடாது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்வில் நகரத் தலைவா் மு. சிவக்குமாா், மாவட்டப் பொருளாளா் மனோகரன், வட்டாரத் தலைவா்கள் கா்ணன், பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.