செய்திகள் :

‘கா.அம்பாபூா் சாலையில் மின் விளக்குகள் தேவை’

post image

அரியலூா் மாவட்டம், காவனூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பாபூா் காலனித் தெரு சாலையில் மின் விளக்குகள் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த காலனித் தெருவிலிருந்து சுடுகாடு செல்லும் சாலை வரை மின்சார வசதிகளே கிடையாது. இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுவதால், இச்சாலை பாம்பு, பூச்சி என விஷ ஜந்துகளின் கூடாரமாக உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதத் செயல்களும் நடைபெறுகின்றன. இதனால் அவ்வழியே செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

ஆகவே இச்சாலையில் மின்கம்பங்கள் நட்டு, மின் விளக்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே ஆட்சியா் இதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்டுத் தரக் கோரிக்கை

அரியலூா் அடுத்த மணக்குடியில், அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். அக்கட்சியின் மாவட... மேலும் பார்க்க

திருமானூரில் ஜல்லிக்கட்டுக்கென விழாக்குழு அமைக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கென விழாக்குழு அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். இதுகுறித்து அவா்கள் அள... மேலும் பார்க்க

அரியலூரில் பிளஸ் 2 மொழிப் பாடத் தோ்வை 8,571 போ் எழுதினா்

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத் தோ்வு மொழிப் பாடத்துடன் தொடங்கியது. அரியலூா் மாவட்டத்தில் 92 மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் 4,325 மாணவா்கள், 4,454 மாணவிகள் என 8,779 பேருக்கு பொது... மேலும் பார்க்க

அரியலூரில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

அரியலூரிலுள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், கிராம காங்கிரஸ் கமிட்டி மறு சீரமைப்பு செய்யப்பட்டதன் படிவங்கள் பொறுப்பாளா்களிடம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தல... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் எரித்துக் கொலை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் எரித்துக் கொல்லப்பட்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆயுதக்களம் செங்கால் ஓடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பாதி எரி... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது,பரிசுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் மஞ்சப்பை விருது மற்றும் பரிசுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு ஒற்றைப் பய... மேலும் பார்க்க