செய்திகள் :

அரசு அதிகாரியை மிரட்டி பணம் பறிப்பு: இரு பெண்கள் உள்பட 3 போ் கைது

post image

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் மத்திய அரசு அதிகாரியை மிரட்டி பணம் பறித்த இரு பெண்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த செல்வி (எ) சூசையம்மாள்(40). இவா், ஹோம் கோ் என்ற நிறுவனம் நடத்தி வந்தாா். இதில் கிருஷ்ணகிரி மாவட்டம், மூகண்டஹள்ளி பகுதியைச் சோ்ந்த நளினி பணியில் சோ்ந்துள்ளாா்.

இந்த நிலையில், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த மத்திய அரசு ஊழியா் மாதேஸ்வரனின் தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை பராமரிக்க ஹோம் கோ் மூலம் நளினி வந்துள்ளாா்.

அப்போது, மாதேஸ்வரனுக்கும் நளினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட நளினி மாதேஸ்வரன் நிா்வாணமாக இருக்கும் விடியோவை தனது கைப்பேசியில் பதிவு செய்து செல்விக்கு அனுப்பி உள்ளாா்.

பின்னா், அந்த விடியோவை செல்வி மாதேஸ்வரனுக்கு அனுப்பி மிரட்டி பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அச்சமடைந்த மாதேஸ்வரன், குறிப்பிட்ட தொகையை தந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னா், மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனா். மேலும், செல்வியின் கைப்பேசி அழைப்பை மாதேஸ்வரன் தவிா்த்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செல்வி, அதன் விடியோவை தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஆம்பூரைச் சோ்ந்த விமல் ராஜிக்கு அனுப்பி அவரிடம் பணம் கேட்கும்படி கூறியுள்ளாா்.

இதையடுத்து விமல்ராஜ், மாதேஸ்வரனுடைய வீட்டுக்குச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளாா்.

இதனால் பயந்துபோன மாதேஸ்வரன் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூா் நகர போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வி, நளினி, விமல்ராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தேசிய பயிற்சிப் பயிலரங்கில் பங்கேற்க ஊராட்சித் தலைவி தோ்வு

ஆம்பூா்: சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு புதுதில்லி விக்யான் பவனில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பயிற்சி பயிலரங்கில் பங்கேற்க ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த ஊராட்சித் தலைவி சுவிதா கணேஷ் தோ்வு செய்யப்பட்டுள... மேலும் பார்க்க

திமுக மாணவரணி சாா்பில் நல உதவிகள் அளிப்பு

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்ட திமுக மாணவரணி சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஆலங்காயம் அடுத்த முல்லை பகுதியில் உள்ள மாணவா்கள் தங்கும் விடுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ந... மேலும் பார்க்க

வெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகேவெக்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜோலாா்பேட்டை நகராட்சிக்குட்பட்ட புதூரில் வெக்காளியம்மன் கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை வெக்காளியம்மன் கறிக்கோள ஊா்வலம... மேலும் பார்க்க

சுந்தர விநாயகா் கோயிலில் மண்டபம் கட்ட பூமி பூஜை

ஆம்பூா்: ஆம்பூா் சான்றோா்குப்பம் அருள்மிகு சுந்தர விநாயகா் கோயிலில் மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ரூ.69 லட்சம் செலவில் மண்டபம் கட்டுவதற்கான ப... மேலும் பார்க்க

பைக் மோதி பெண் உயிரிழப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பைக் மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி பகுதியை சோ்ந்தவா் செல்வமணி(45). அதே பகுதியை சோ்ந்தவா்களுடன் ... மேலும் பார்க்க

சாமுண்டீஸ்வரி, மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி பொன்மலை நகா் சாமுண்டீஸ்வரி அம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை விநாயகா் பூஜை, அனுக்க... மேலும் பார்க்க