ஸ்கைப் சேவை நிறுத்தம்! பயனர்களுக்காக மைக்ரோசாஃப்ட் ஏற்படுத்திய வசதி!
பணியில் தூங்கிய பாதுகாவலர்... புகைப்படம் எடுத்த சக ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு!
இந்தூரில் பணியின்போது தூங்கிய பாதுகாவலர் ஒருவர் தன்னைப் புகைப்படம் எடுத்த சக ஊழியரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள நகைக்கடையில் பாதுகாவலராக பணிபுரிபவர் பிரமோத் பாண்டே (56). இவர் கடந்த சனியன்று (மார்ச். 3) இரவுப் பணியின் போது தூங்கியதாகக் கூறப்படுகிறது.
இதைப் புகைப்படம் எடுத்த நகைக்கடையின் விற்பனையாளரான சஞ்சய் ஜக்தப் (49), ஊழியர்களின் வாட்சப் குழுவில் அதனைப் பகிர்ந்தார்.
இதனால், பிரமோத் கோபமடைந்தார். ஞாயிறன்று இரவு ஜக்தப் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் அவரைச் சுட்டதில் கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
இதையும் படிக்க | ரோஹித் சர்மா உடல் எடையைக் குறைக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் கருத்து!
இதனைத் தொடர்ந்து, காயமடைந்த ஜக்தப் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
துப்பாக்கியால் சுட்ட பிரமோத்தை காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து அவரது துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.